"ஈரானுக்கு எதிராகத் திரண்ட 40 நாடுகள்!" - ஹோர்முஸ் நீரிணையை மீட்கப் பிரம்மாண்ட கூட்டணி!

#world_news #International #Country #War #Iran #ImportantNews #L4
Lakhi
1 hour ago
"ஈரானுக்கு எதிராகத் திரண்ட 40 நாடுகள்!" - ஹோர்முஸ் நீரிணையை மீட்கப் பிரம்மாண்ட கூட்டணி!

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கும், உலகப் பொருளாதாரத்தை ஈரான் "பயணக் கைதியாக" வைத்திருப்பதைத் தடுப்பதற்கும் சுமார் 40 நாடுகள் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுப்பது குறித்து நேற்று(02) ஆலோசனை நடத்தின.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த நீரிணையைப் பாதுகாப்பது சம்பந்தப்பட்ட நாடுகளின் பொறுப்பு என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யுவெட் கூப்பர் (Yvette Cooper) தலைமையில் இந்த மெய்நிகர் (Virtual) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.

ஈரானின் "பொறுப்பற்ற" செயலால் உலகெங்கிலும் உள்ள வீடுகளும் வணிகங்களும் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட யுவெட் கூப்பர், சர்வதேச கப்பல் பாதையை ஈரான் முடக்கியுள்ளதைச் சாடினார். ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்துவதற்கு ஈரான் எவ்வித கட்டணத்தையும் விதிக்கக்கூடாது என்றும், அனைத்து நாடுகளும் அதை சுதந்திரமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

அதேவேளை, இந்த நீரிணையை இராணுவ ரீதியாகக் கைப்பற்றுவது என்பது "யதார்த்தமற்றது" என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளாதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!